நாடாளுமன்ற அலுவலகத்தில் நுழைந்த பாம்பு; ஊழியர்கள் அச்சம்
இலங்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒரு பாம்பு காணப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
சபாநாயகர் வழக்கமாக உணவு உட்கொள்ளும் பகுதிக்கு அருகிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு நேற்று (18) காலை நுழைய முயன்றபோது ஊழியர்கள் முதலில் பாம்பைக் கவனித்தனர்.

தியவன்னா ஓயா
சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் தோட்ட பராமரிப்பு அதிகாரி உடனடியாக செயல்பட்டு பாம்பை அகற்றியதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற வளாகத்திற்குள் பல்வேறு பாம்புகள் சில காலமாக நுழைந்து வருகின்றன, முக்கியமாக தியவன்னா ஓயா பகுதியிலிருந்து வருகின்றன.
சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட இருபது பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.