முதலமைச்சர் விஜய் பிரித்தானியாவிற்கு பயணம்
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி பிரித்தானியாவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்த வெளிநாட்டு பயணங்களின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது பிரித்தானிய பயணத்தின்போது, மனைவி சங்கீதாவையும் சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.