மு.க ஸ்டாலினை சந்திக்கின்றார் முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
மேலும், அடுத்தடுத்து முத்த உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்றையதினம் பதவியேற்ற நிலையில் தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது.
இந்த பதவியேற்பு முடிந்தபிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.