மீனவர் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு நடத்த தமிழக முதல்வர் அழைப்பு!
எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில் அவர் இதனை கூறினார்.
எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமன்றி உயிரிழப்புக்களும் ஏற்படுவதாக சிவாஜிலிங்கம் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கை கடற்படையினரது படகுகளாலும், விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இருப்பினும் இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்திய சிவாஜிலிங்கம், மீனவர் விவகாரம் குறித்து இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.