இலங்கையின் போதைப்பொருள் கடத்தலுக்கு பரிமாற்ற தளமாக சென்னை ; அதிர்ச்சி கொடுத்த புலனாய்வுத் தகவல்
இலங்கை உட்பட்ட பல்வேறு நாடுகளுக்குக் கடத்தப்படும் போதைப்பொருட்களுக்கு, தமிழகத்தின் சென்னை நகரம், பரிமாற்ற தளமாகச் செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் தரப்புக்களைக் கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்கள் கடத்தல்
சென்னையின், பாரிஸ் பிரதேசங்களில் உள்ள இடங்களில் இதில் பரிமாற்றச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மார், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து கொக்கேயின், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பல்வேறு வழிகளில் கடத்தப்பட்டு, பாரிஸ் போன்ற இடங்களுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
பின்னர், இந்தப் போதைப்பொருட்கள் தொடருந்து மற்றும் வீதி வழியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இலங்கைக்கும் பின்னர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவிற்கும் கடத்தப்படுகின்றன.
மணிப்பூரின், மோரேயில் வசிக்கும் தமிழர்கள், தொடருந்துகள் வழியாகத் தமிழ்நாட்டிற்கு போதைப்பொருட்களைக் கொண்டு வருகிறார்கள் என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தநிலையில் இரகசியத் தகவல்கள் கிடைக்காது போனால், பொலிஸார் எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.