70 பவுண் நகை.... ஆடம்பர கார்; வரதட்சணை கொடுமையால் வாழ்வை முடித்த ஆசிரியை
70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோவிலம்பாக்கத்தில் 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை
கணவர் மற்றும் மாமியார் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக புவனேஸ்வரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எம்.எஸ்சி., பி.எட். படித்திருந்த புவனேஸ்வரி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பரில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், 50 சவரன் தங்க நகைகள் வழங்கியதாகவும், மணமகனுக்கு 20 சவரன் நகைகள் கொடுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் தங்கச்சங்கிலி வழங்கியதை தொடர்ந்து பிரச்சினை தீவிரமானதாகவும் கூறப்படுகிறது.
புவனேஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது