சிங்கார சென்னைக்கு இன்று 385-வது பிறந்தநாள்!
தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சிங்கார சென்னை மாநகருக்கு இன்று 385 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.. அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது.
சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது.
சென்னை உருவான வரலாறு....
மெட்ராஸ், 1639-ம் ஆண்டு வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி சென்னையில் தரை இறங்கியது. அவர்கள் தரை இறங்கிய இடம் அந்த கால கட்டத்தில் மதராச பட்டிணம் என அழைக்கப்பட்டது.
இன்று தனது 384-வது பிறந்த நாளை கொண்டாடும் சென்னை, உலகின் 31-வது பெரிய நகரமாகவும் உள்ளதுடன் , இந்தியாவின் 4-வது பெரிய நகரம் சென்னை ஆகும்.
காலப்போக்கில் சென்னை நகரை சுற்றி இருந்த பல கிராமங்கள் இணைந்தே தற்போது சிங்கார சென்னையாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை நகர் தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.
வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை.
இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!
பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.