ஓலைக்கொட்டிலில் 4 பிள்ளைகளோடு ஏமாற்றப்பட்ட தாய்!(Video)
நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரினாலும் அதன்பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் வறுமைகோட்டிற்குட்பட்ட குடும்பங்களே அதிகம் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதிலும் பெண் தலைமத்துவ குடும்பங்கள் படும் கஸ்ரங்கள் பல. தமிழர்களின் கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகும். ஆனால் காலபோக்கில் அதுமாறி எமது அடுத்த சந்ததி எங்கு சென்று நிற்கப்போகிறதோ என்கின்ற கவலையை தோற்றுவித்துள்ளது.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பலர் தாயக பகுதிகளில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பிள்ளைகளோடு மனைவியை தவிக்கவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நினைத்துப்பார்ப்பதில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
14 வயதில் திருமணம் முடித்து நான்கு பிள்ளைகளுடன் கணவனால் கைவிடப்பட்ட இளம் தாய் ஓலைகுடிசையில் தன் பிள்ளைகளுடன் படும் துன்பங்கள் இன்றைய காணொளியில்...