இலங்கையில் விரைவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை!
இலங்கையில் விரைவில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தெரிவித்துள்ளார்.
தற்போது பல நாடுகள் இந்த விமான சேவைகளை இயக்குகின்றன.
இதேவேளை, இலங்கையில் இன்னும் அத்தகைய சேவை இல்லை என்பதால், விருப்பத்தை பரிசீலித்து இது தொடர்பான வேலைத் திட்டத்தை தயாரிப்பது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல விமான நிலையங்கள் உள்ளதாகவும், இலங்கையின் வான்வெளியில் இயங்கும் விமானங்களுக்கான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளுடன், பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் புறப்படுவதை உறுதிசெய்து அவை இயக்கப்படுகின்றன என்றார்.