சந்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். அந்த வகையில் சந்திரன் செப்டம்பர் 21 ஆம் திகதி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த ராசியில் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை இருப்பார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சந்திரனின் சனி பகவானின் ராசிக்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வேலையில் அழுத்தம், செலவுகளில் அதிகரிப்பு, மன குழப்பம் போன்றவற்றை சந்திக்கக்கூடும். இப்போது சந்திரன் சனி பகவானின் மகர ராசிக்குள் சென்றுள்ளதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்

மிதுனம்
சந்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சிரமங்களை கொண்டு வரும். வாழ்வில் எதிர்பாராத அளவில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். வேலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களின் விஷயங்களைப் பற்றி வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உள்ள எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பாராத பல செலவுகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புக்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியத்தை தவிர்த்து, உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். இதன் மூலம் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவதை எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தால் மனதளவில் வருத்தப்படுவீர்கள்.
