இலங்கைவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்!
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கடந்த 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஐக் கடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தியாவிலிருந்து 18,466 பேர் வருகைத் தந்துள்ளதாகவும் சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் , ஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மனி, கஸகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளும் இலங்கை வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.