இலங்கை அரசியலில் களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதியின் மகன்?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் (Chandrika Kumaratunga) மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விமுக்தி அரசியலில் ஈடுபட உள்ளதாக முன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
,
இருப்பினும், அரசியலில் பிரவேசிக்கும் எவ்வித திட்டங்களும் விமுக்திக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் புதிய சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தினை திறந்து வைத்தார்.
புதிய சுதந்திரக் கட்சியின் தலைவராக குமார வெல்கம கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமுக்தியை அரசியலில் களமிறக்க முயற்சித்து வருவதாக குமார வெல்கம கூறியிருந்தார்.