வடமாகாண வானிலையில் அடுத்த 4 தினங்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் நேற்று (18-06-2024) முதல் எதிர்வரும் 22.06.2024 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாளை முதல் தென்மேற்கு பருவக்காற்று மழையின் இரண்டாவது சுற்று ஆரம்பமாகும்.
இதன்மூலம் கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை மாவட்டங்கள் அடுத்து வரும் 07 நாட்களுக்கு கன மழை பெறும் வாய்ப்புள்ளது.
இக்காலப்பகுதியில் இம்மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை அடுத்த வாரமளவில் மத்திய வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அடுத்த வார முற்பகுதியிலேயே இதனை உறுதிப்படுத்த முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.