வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் அரச உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி
குருணாகலில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகபொல்பிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த திங்கட்கிழமை (13) மாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பெண் அரச உத்தியோகத்தரின் கழுத்தில் காயங்கள்
குருணாகலில் பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இனந்தெரியாத இருவர், மற்றுமொரு பொல்பிதிகம பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவரின் தங்கச் சங்கிலியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவர் திங்கட்கிழமை மாலை தனது கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்துக்கு முகம்கொடுத்த பெண் அரச உத்தியோகத்தர் இது தொடர்பில் பொல்பிதிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பெண் அரச உத்தியோகத்தரின் கழுத்தில் காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் பொல்பிதிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.