இலங்கையிலுள்ள வங்கிகளிலுள்ள வெளிநாட்டவர்களின் பணத்திற்கு ஆபத்தா?
இலங்கை மத்திய வங்கி தொடர்பில் போலி தகவல்கள் பரபரப்பப்படுவதாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை வங்கிகளில் உள்ள இலங்கை வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் போலியானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான பிரசாரங்கள் வெளியாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வேறு விதமாக தகவல்களே வெளியிடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
பல சமூக ஊடக பயனர்கள், கடந்த சில நாட்களாக தங்கள் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை மாற்ற தங்கள் வங்கிகள் தங்களை தொடர்பு கொண்டுள்ளதாக ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.