விசேட அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி
ஏற்றுமதி வருமானத்தை மாற்றுவதற்கான விதிகள் பணம் அனுப்புதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் புரிந்து கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் வருமானத்தை சரியான வழியில் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வெளிநாட்டு நாணய நிதியை எந்த வணிக வங்கியிலும் வைத்திருக்க முடியும் என்று மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான விதிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் இலங்கை பணியாளர்களுக்குப் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.