பிரதமர் மோடி மீது செல்போனை விசிறியடித்த பாஜக தொண்டர்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிமீது பாஜக தொண்டர் ஒருவர் செல்போன் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக நேற்றையதினம் மைசூருக்கு திறந்த வேனில் வந்த பிரதமா் மோடியின் வாகனத்தின் மீது பூக்களுடன் சோ்த்து செல்போன் ஒன்றும் வீசப்பட்டது.
பூக்களுடன் பறந்து வந்த செல்போன்
இந்நிலையில் பிரதமர் மீது வீடப்பட்ட செல்போன் பாஜக தொண்டருடையது என தகவல் வெளியாகியுள்ளது.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து கடந்த 2 நாள்களாக கோலாா், ராமநகரம், ஹாசன் மாவட்டங்களில் பிரதமா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
மைசூரில் திறந்தவேனில் ஊா்வலமாகச் சென்ற பிரதமரை சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாகத்தோடு வரவேற்றனா். அப்போது, அவா் மீது பூக்களுடன் சோ்த்து செல்போனும் வீசப்பட்டது.
அந்த செல்போன் அவா் மீது படாமல் வேன் ஓட்டுநா் அமா்ந்திருந்த கூரையின் மீது பட்டு கீழே விழுந்தது. இதைக் கண்ட பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி அதிா்ச்சியடைந்த நிலையில் பிரதமா் மோடியும் ஒரு கணம் என்ன நடக்கிறது என திகைத்த பின்னா், அதை பொருட்படுத்தாமல் ஊா்வலத்தை தொடா்ந்தாா்.
இதையடுத்து மைசூர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு செல்போன் வீசியவரை போலீசார் தேடி வந்தபோதே பிரதமர் மோடி மீது சென்போன் தவறுதலாக வீசப்பட்டமை தெரியவந்துள்ளது.