பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் சிறையில் அடைக்கப்படுவாரகள் ...பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
காஷ்மீரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவரின் சர்ச்சை ஏற்படுத்திய கருத்து.
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக இந்தியா அணியை வீழ்த்தியது, அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியானது இந்தியா ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் காஷ்மீரில் மருத்துவக்கல்லூரி விடுதி ஒன்றில் மாணவர்கள் பாக்கிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலானது. இது தொடர்பில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் மீது பல்லக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா கூறியதாவது, "மெகபூபா முப்தி தலீபானிய எண்ணங்களுடன் உள்ளார்.
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாக்கிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடுபவர்கள் நாட்டுக்கு எதிராக சாதி செய்ததாக சிறையில் அடைக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.