இலங்கை மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்!

Government Of Sri Lanka Ceylon Electricity Board Minister of Energy and Power
By Sulokshi Apr 25, 2026 11:13 AM GMT
Report

   2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை ரூ. 38.7 பில்லியன் நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன.

இலங்கை மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்! | Ceb Posts Rs 39 B Loss In 2025 Despite

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்

இக்கட்டணக் குறைப்பு மற்றும் ஆண்டின் முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக வெப்ப மின் உற்பத்தி அதிகரித்தமை போன்றவற்றால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு உயர்வு, மின்சார சபையின் நிதிச் செயல்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிதி இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 2025 ஜூன் மாதம் மின்சாரக் கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது நட்டத்தை ஈடுசெய்யப் போதுமானதாக அமையவில்லை என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, 2024 இறுதியில் 174.3 பில்லியன் ரூபாவாக இருந்த மின்சார சபையின் குறுகிய காலக் கடன்கள் மற்றும் பொறுப்புகள், 2025 இறுதியில் 206.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளன.

அதே காலப்பகுதியில் நீண்ட காலப் பொறுப்புகள் 409 பில்லியனிலிருந்து 411.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளன.

இதேவேளை, மின்சார விநியோகச் செலவு மற்றும் வருமான முன்கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மேலும் 10.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டில் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன் மின்சாரத்திற்கான கேள்வியும் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய அனைத்து நுகர்வோர் பிரிவுகளிலும் மின்சார விற்பனை ஒட்டுமொத்தமாக 5.8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

குறிப்பாக வீட்டுப் பாவனையாளர் பிரிவில் இரண்டாம் காலாண்டிலிருந்து வலுவான வளர்ச்சி காணப்பட்ட போதிலும், ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட 'டித்வா' புயல் காரணமாக மின்சாரக் கேள்வி தற்காலிகமாகக் குறைந்திருந்ததாக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US