கொழும்பில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை சிசிரிவி கண்காணிப்பு கமரா அமைப்பு மூலம் கண்டறியும் விசேட வேலைத்திட்டம் இன்று (22-01-2024) முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த முயற்சியின் முன்னோடித் திட்டம் இன்று முதல் ஜனவரி 31 வரை நாட்டின் வணிகத் தலைநகரில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்படி, கொழும்பில் உள்ள பொலிஸாரால் சிசிரிவி கமரா அமைப்பு கண்காணிக்கப்படும் என்றும், அதன் பின்னர், போக்குவரத்து விதிமீறல் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு உரிமையாளருக்கு அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார்.