வீடொன்றிற்குள் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியவரால் பரபரப்பு
இரத்தினபுரி , கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகரங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
கலவானை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில், கலவானை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.