கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த சோகம்
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கனடாவாழ் நபர் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிற்சை பலனின்றி திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் மாதகலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை (25) மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ் போதனை வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மேலும் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கனடாவில் இருந்து தாயகம் திரும்பியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.