நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஜூலைக்கு!
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் 2016 ஆம் ஆண்டு நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்களும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.