இலங்கையில் தகாத உறவால் பயங்கரம் ; குடும்ப பெண்ணுக்கு கள்ளக்காதலன் நடத்திய கொடூரம்
நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார்.
நேற்று (28) பகல் பிபில, ரதலியத்த பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காதலனும் வைத்தியசாலையில்
உயிரிழந்த பெண் 40 வயதுடைய ரதலியத்த, பிபில பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
உயிரிழந்த பெண்மணிக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக, தற்போது மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேகநபரும் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.