பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றுமொரு வேட்பாளர் ; தொடரும் அட்டூழியங்கள்
சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக மற்றுமொரு வேட்பாளரும் பொலிஸாரினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, யுவதி ஒருவர் மீதான பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக, லக்கல பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மற்றுமொரு வேட்பாளர் பஸ்ஸர பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஸ்ஸர பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்
14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பஸ்ஸர பிரதேச சபையில் போட்டியிடும் 34 வயதுடைய வேட்பாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பஸ்ஸர பொலிசாஸாாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஸ்ஸர பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பலாத்காரமாக வீட்டில் நுழைந்து 19 வயதுடைய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் லக்கல பொலிஸாரினால் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுற சில நிமிடங்கள் இருந்த நிலையில் வீடுகளில் நுழைந்து வாக்குகளை கேட்கும் சந்தர்ப்பத்திலேயே இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.