போலி ஆவணங்களுடன் சிக்கிய வேட்பாளரின் கணவர் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கணவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்கள்
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 66 வயதுடைய பண்டாரகம பிரதேச சபையின் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் ஆவார்.
சந்தேக நபரின் மனைவி எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 2023 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள், கிராம சேவைச் சான்றிதழ்கள், போலி முத்திரைகள் தாயாரித்தல் போன்ற குற்றச்சாட்டில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.