யாழில் தங்கியிருந்த கனடாவின் அதியுயர் பொலிஸ் அதிகாரியான இலங்கையர்!
கனடாவில் அதியுயர் பொலிஸ் பிரிவில் உள்ள நிஷான் துரையப்பா, கனடாவில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட வீட்டை ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த நிஷான் துரையப்பா இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கனடாவில் 2019ஆம் ஆண்டு முதல் பீல் பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் பிரதானியாக கடமையாற்றி வரும் நிஷான் துரையப்பா, 1973ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர் ஆவார்.
மேலும் இவர் யாழில் முன்னாள் மேயரான ஆல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார். அவர் தனது தனிப்பட்ட விஜயமாாக இலங்கை வந்திருந்த போது, முக்கிய அரசியல்வாதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் தலைமையகத்திற்கு விசேட விரிவுரை மற்றும் கலந்துரையாடலும் நடத்தினார்.
குறித்த விஜயத்தின் போது யாழில் அதிக நாட்களை செலவிட்டதுடன் தனது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டுள்ளார்.
இதன்போது தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை ஏழைக் குடும்பத்திற்கு வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.