யாழில் போராட்டத்தை நடத்த பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
யாழ். உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அதனை உடனடியாக அகற்றக்கோரி இன்றையதினம் (02-01-2024) காலையில் இருந்து மதியம் வரை உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்பு விட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு வணிக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள் சந்தை வியாபாரிகள் ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளது.