நாட்டில் மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வார இறுதி நாளான இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நுவரெலிய மற்றும் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையங்களின் விலைப்பட்டியல்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தன.

மரக்கறிகளின் விலை
அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோவா, நுவரெலியாவில் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோகிராம் போஞ்சி, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நுவரெலியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு கிலோகிராம் கரட், யாழ்ப்பாணத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோகிராம் தக்காளி யாழ்ப்பாணத்தில் 450 ரூபாய்க்கும், நுவரெலியாவில் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நுவரெலியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் லீக்ஸ், யாழ்ப்பாணத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் 20 சதவீத மரக்கறிகள் மாத்திரமே அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், நகர்ப்புறங்களிலுள்ள தனியார் வர்த்தக நிலையங்களில் அதிகரித்த விலையிலேயே மரக்கறி விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.