கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
கனடா நகரமான மிசிசாகாவில் கார் மோதியதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (14-12-2021) காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வீடு ஒன்றில் இருந்து திடீரென வெளியேறிய கார், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவிலை பிறப்பிடமாக கொண்டவர் பெண் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தை ஏற்படுத்தியவர் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்லாமல் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தின்போது வாகனத்திற்கு அடியில் இருந்த பெண்ணை வெளியே எடுத்து தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணையை பீல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.