இரவு உணவின் மூலம் உடல் எடையை குறைக்கலாமா
உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையை கட்டுப்படுத்துபவர்கள் இரவில் சாப்பிடும் உணவை சரியாக வேண்டும் என்று கூறப்படுகின்றது.
அத்தோடு "காலை உணவை அரசரைப் போலவும் இரவு உணவை பிச்சைக்காரனைப் போலவும் இருக்க வேண்டும்" அதாவது, இரவு உணவு இலகுவாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.வயிறு நிரம்புவதற்காக சாப்பிட்டாலும், ஒரு நாளின் கடைசி உணவில் கலோரிகள் அதிகமாக இருக்கக் கூடாது, எனப்து முக்கியம்.
இரவு உணவை சற்று முன்னதாகவே சாப்பிட வேண்டும். தூங்குவதற்குக் 3 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிடலாம். இதைச் செய்வதன் மூலம் தூக்கம் நன்றாக இருக்கும், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் மற்றும் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இரவில் லேசான உணவை உட்கொள்வதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்
மரவள்ளிக்கிழங்கின் வேர்களில் இருந்து பெறப்பட்ட ஒரு தாவர ஸ்டார்ச் ஆன ஜவ்வரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இதை காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.
ஓட்ஸ் இட்லி நார்ச்சத்து நிறைந்த உணவு மட்டுமல்ல, இது மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இருக்கும். காலை உணவு அல்லது இரவு உணவிலும் இந்த உணவை சேர்க்கலாம். இது ஜீரணிக்க எளிதானது மற்றும் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் இது செயல்படுகிறது.
பப்பாளியில் பப்பேன் என்ற இயற்கை நொதி உள்ளது மற்றும் இது வாயு, மலச்சிக்கல் போன்ற சிக்கல்களைக் குறைக்கும். உடல் எடையை குறைக்கவும் பப்பாளி உதவுகிறது.
சுரைக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள \சுரைக்காய் செரிமான பிரச்சனைகளை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று கூறப்படுகின்றது.