அதிக விலைக்கு 1977ஐ அழையுங்கள்!
அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து 1977ஐ அழையுங்கள் அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977க்கு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள டைல்ஸ் தட்டுப்பாட்டை சில விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் டைல்ஸ் விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கை யில் உள்ள முன்னணி டைல்ஸ் நிறுவனம் ஒன்று அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பது குறித்து வர்த்தகர்கள் மீது முறைப்பாடு அளித்துள்ள தாகவும் அவர் கூறினார்.
மேலும் சில டைல்ஸ் விற்பனையாளர்கள் பல்வேறு வண்ண டைல்ஸ்களை வழங்கி நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.