அமைச்சரவை அங்கீகாரம்; தரமிறக்கப்பட்ட இலங்கை
இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பு
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையானது இதுவரையில் மத்திய வருமானம் பெறும் நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவிகளை பெறும் நோக்கிலும், அந்நிய செலாவணி இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, பணவீக்கம், கடனை மீள செலுத்துவதில் உள்ள நெருக்கடி உள்ளிட்ட காரணிகளாலுமே இவ்வாறு குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.