இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (12) தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 15-வது துணை ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கிறனர்.
துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களவை தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.4 இலட்சம் சம்பளம் கிடைக்கும்.
இது தவிர துணை ஜனாதிபதிக்கு உறைவிடம், மருத்துவம், பயணம் உள்பட பல சலுகைகள் உள்ளன. துணை ஜனாதிபதி ஓய்வுக்குப் பின்னர் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.