முகம் பளிச்சுனு ஆக வெண்ணெய் மருத்துவம்
முகத்தில் இருக்கக் கூடிய இறந்த செல்களை நீக்க இரண்டு தே கரண்டி வெண்ணெயுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதை மசாஜ் செய்து ஃபேஸ் பேக்காக போட்டு 15 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து எடுத்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்.
ஆலிவ் எண்ணெய் சேர்ப்பு
சுத்தமான வெண்ணை வாங்கி வெண்ணை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.
இந்த கலவையை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர விட்டு பின்னர் துடைத்து எடுத்தால் உங்களுடைய முகம் பளிங்கு போல மின்னும்.
முகம் அடிக்கடி வறண்டு போனால் பப்பாளி பழத்தை கூழ் போல செய்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து கிரீம் போல முகத்தில் தடவி உலர விட்டு துடைத்தால் நல்ல ரிசல்ட் தெரியும், எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
முகம் பளிச்சுனு ஆக
அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் ஊறினால் ஒரு பாவக்காயை மிக்ஸியில் அடித்து கூழாக்கி கொள்ளுங்கள்.
அதனுடன் தேவையான அளவிற்கு வெண்ணெயை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர விட்டால் சருமபிரச்சனைகள் பலவும் தீரும். எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் கூட இருக்காது.
அதிகப்படியாக முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால்ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போலதோன்றினாலும் சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறைஇதை செய்யலாம்.