கெஹெலிய விவகாரத்தில் அதிரடி ; ரூ. 30 மில்லியன் பணமோசடியுடன் தொடர்புடைய தொழிலதிபருக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பணமோசடி விசாரணைத் தொடர்பில், கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஒருவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தனது பதவிக்காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமார் ரூ. 748 மில்லியன் பணத்தை ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தைச் சலவை செய்த விவகாரம் குறித்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த பாரிய பணமோசடி வலையமைப்பில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
தனக்குச் சொந்தமில்லாத ரூ. 30 மில்லியன் பணத்தை, அது சட்டவிரோதமானது என்று தெரிந்தே தனது வசம் வைத்திருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.