வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தொழிலதிபர் அதிரடி கைது
கட்டுநாயக்கவில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
கைப்பற்ப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி 1,94,85,514 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று காலை 6.30 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்திருந்துள்ளார்
அவர் தனது பயணப் பையில் 271 கிராம் (480 மில்லிகிராம்) எடையுள்ள 12 தங்க நெக்லஸ்கள், 10 கைக்காப்புகள் மற்றும் 2 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த நிலையில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், இன்று காலை, மேலதிக விசாரணைக்காக சுங்கத் தடுப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.