மீண்டும் சிறையாக ஸ்தாபிக்கப்படும் பழைய போகம்பரை சிறைச்சாலை ; வௌியானது வர்த்தமானி
Kandy
New Gazette
Prison
Harshana Nanayakkara
By Vironika
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) 2 ஆவது பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, பழைய போகம்பரை சிறைச்சாலையின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US