வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான அரச பேருந்து... 9 பேருக்கு நேர்ந்த நிலை!
Sri Lanka Police
Kandy
Accident
By Shankar
மயிலாப்பிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்குரங்கெத்தயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்தொன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (11-05-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட பலர் கண்டி பொது வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US