விபத்தில் சிக்கிய சாதாரண தர பரீட்சை மாணவி... வைத்தியசாலையில் கவலைக்கிடம்!
இரத்தினபுரி - பலாங்கொடை, வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில் பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வீதியின் எதிர்திசையில் சென்ற டிப்பர் பாரவூர்தியில் இருந்த இரும்புக் குழாய்கள் சில பேருந்துக்குள் வீசி எறியப்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பேருந்தில் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.