இலங்கையை உலுக்கிய கோர விபத்து; உடனடி விசாரணைக்கு உத்தரவு!
வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் கோர விபத்திற்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலனறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
10 பேர் பலி
பஸ்லில் கிடத்தட்ட 50 பேர் பயணத்திருக்கின்றார்கள், 10 பேர் அளவில் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
அத்துடன் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் தெரிவித்தார்.
மேலும் விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் கிழக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.