பணிப்பெண் என்ற போர்வையில் பல வீடுகளில் திருட்டு; பொறிவைத்து பிடித்த பொலிஸார்
பல்வேறு பிரதேசங்களில் பணிப்பெண் என்ற போர்வையில் உள்ள வீடுகளில் இருந்து நகைகள் மற்றும் சொத்துக்களை திருடியதாக கூறப்படும் பெண் ஒருவர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரத்மலானை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறிவைத்து பிடித்த பொலிஸார்
சம்பவத்தில் கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தெஹிவளை, ஹொரணை மற்றும் மிரிஹான உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு பணிப்பெண்ணாக சென்று அந்த வீடுகளில் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை திருடுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 02 தங்க வளையல்கள், 02 தங்க மாலைகள் மற்றும் பென்டென் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.