உலகின் மிக உயரமான பங்கி ஜம்பிங் விளையாட்டுத் தளமாக கொழும்பு தாமரை கோபுரம்
2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு கோபுரத்திலிருந்து உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப் ஆகும்.
சுற்றுலாத்துறை மேம்பாடு
கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.