17 ஆம் திகதி கூடும் நாடாளுமன்றம் ; 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாசிப்பு
புதிய அரசின் முதல் பட்ஜெட், 2025ம் ஆண்டுக்கான அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை ஆற்ற உள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன் இந்த விசாரணை பல துறைகளில் உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள், சுகாதாரம் மற்றும் பிற நிபுணர்களின் வரவு செலவுத் திட்ட எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையது.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேயிலை கைத்தொழில் நேரடியாக பங்களிப்பதுடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நாளாந்த சம்பளம் 2,500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென தேயிலை தொழில்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் வரவு செலவுத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான பதில் கிடைக்க வேண்டும் என்பதே ஆசிரியர் அதிபர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக குத்தகை சலுகைகளை எதிர்பார்ப்பதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் இலகுவான பயணத்துக்காக பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ் சாரதிகளும் இந்த வருட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதேவேளை, மீனவ சமூகம் தமது தொழிலை எவ்வித பிரச்சினையுமின்றி தொடரும் வகையில் இவ்வருட வரவு செலவு திட்டத்தில் வரிச்சலுகை மற்றும் எரிபொருள் மானியம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டிற்கு அரிசி வழங்கும் நெல் விவசாயிகள் கடந்த காலங்களில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஆடை உட்பட பல துறைகளில் முதலீடு செய்ய வரும் மக்களின் பாதுகாப்பு, தடையின்றி தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழல் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என அல் ஒபைரானி அப்பேரல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பிரதிநிதி யாஷிர் லஹிர் தெரிவித்தார்.