கொழும்பு மாநகர சபையில் வெற்றி பெற்ற NPPயின் வரவு செலவு திட்டம் ; மண்ணை கவ்விய எதிர்தரப்பு
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இயங்கும் கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி 3 வாக்குகளால் பெரும்பான்மையாக தோற்கடிக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.