நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டம்!
இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்போது, 2 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன் (C.V Vigneswaran) மற்றும் வேலுகுமார் ஆகியோரே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.
முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், (Ranil Wickremesinghe) கடந்த நவம்பர் 14ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று, கடந்த 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பின்னர் இன்று (08-12-2022) மாலை இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற்றது.