2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; முதியோர் கொடுப்பனவும் அதிகரிப்பு!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதியோர் கொடுப்பனவும் 5000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதோடு சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த உதவித்தொகை 7500 முதல் 10,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதியோர் கொடுப்பனவு 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்ட ஒரு மில்லியன் ரூபாய்.
தடுப்பு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 5,000.
நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக ஐநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
அங்கவீனமடைந்தோர் தொடர்பான விரிவான தரவு அமைப்பை உருவாக்க 100 மில்லியன் ரூபாய்.
இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டை நிர்மாணிக்க ஒரு மில்லியன் ரூபாய்.
காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை.
நன்னடத்தை பிரிவில் உள்ள சிறுவர் நலனுக்காக ஐநூறு மில்லியன் ரூபாய்.