நிதி நிலைமை தொடர்பில் எவரும் இனி கனவு காண கூடாது; ஜனாதிபதி அனுர
நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளும்ன்றில் இன்று தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.

இதன்போது ஜனாதிபதி உரையாற்றுகையில், பொருளாதார மீட்சிக்கு எடுத்த சிறந்த தீர்மானங்களால் பெருமைக்கொள்கிறோம். பேரண்ட பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்யவும்,நிதி ஒழுக்கத்தை நிலைப்படுத்தவும் கடுமையான எடுத்துள்ளோம்.
பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது எனத் தெரிவித்தார்.