கொக்கிளாய் பகுதியில் புத்தர் சிலை உடைப்பு; நீர்கொழும்பு நபர் கைது!
முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் புத்தர் சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொக்குளாய் மேற்கு முகத்துவாரம் பகுதியில் புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் மீன்பிடி தொழிலுக்காக கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் வந்திருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறிய கொக்குளாய் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டுவருகின்றனர்.