கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூர கொலை ; ஆரம்பகட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்
மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்கன்னாவ பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (22) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்தவருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அது பாரதூரமானமை காரணமாக அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி, குறித்த நபரை கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் சேர்ந்த 38 வயதுடைய மாரவில - துன்கன்னாவ பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.